Feb 14, 2006

காதலர் தினம் - யாருக்கு உரிமை? (14 feb 06)

என்னவளைக்கண்டு நாணி
சாலை ஓரத்தில் நின்றது
பேருந்து மட்டுமா?
என் இதயமும்தான்.

பயணம் முடித்த பாட்டி அவளுக்கு
அமர இடம் கொடுத்தாள் - நானோ
என் நெஞ்சில் அவளுக்கு
அமர இடம் கொடுத்தேன்..

என்கிற ரேஞ்சில் கவிதைகளில் விளையாடிக்கொண்டிருக்கும் இளவட்டங்களே, காதலர் தினத்தை என்ஸாய் பண்ணுங்க:-)

காதலர் தினத்தின் வியாபார நோக்கங்கள் வெளிப்படையாகவே தெரிந்தாலும், காதல் என்ற வஸ்து வியாபரமாக்கப்படுவது இன்றா நேற்றா? எஸ். வி.வி ஒரு கதையில் எழுதி இருந்தார்.."அவனும் அழகாக இருந்து அவளும் அழகாக இருந்து சைத்தானும் புகுந்துகொண்டு விட்டால் காதல்தானே.. மேலே கேட்பானேன்?"

ஆனால், காதல் வசப்பட்டவர்களை விட, அதற்குத் துணை போகும் பரிதாப ஜீவன்களுக்காக 360 நாள் சிறப்புதினங்கள் கொண்டாடலாம்.. தப்பில்லை.

"டேய்.. அவ இன்னிக்கு என்னை ஒரு மயக்கற பார்வை பார்த்தா பாரு.."

"என் ஆளு சிரிச்சா சிற்றிலக்கியம், பேசினா பேரிலக்கியம்டா"

போன்ற பொன்மொழிகளை சிரிக்காமல் கேட்டுக்கொள்ளும்

"அவன் உனக்காக உயிரையே விடுவாம்மா.. நேத்து காலையிலே இருந்து 12 மணிவரை சாப்பிடவே இல்லைம்மா"

என்று தூது போகும்

"என் பைக்கை எடுத்துகிட்டுப்போ.. பெட்ரோல் மட்டும் போட்டுக்கோ"

என்று பகுதி நேரக் கர்ணன்களாக மாறும்

"உன் கல்யாணத்த நான் முடிச்சு வைக்கிறேண்டா"

என்று உறுதி அளிக்கும்

"மெட்ராஸ் போயிட்டா போதும், என் பிரண்டு வீட்டுலே ரெண்டு மூணு நாள் இருந்துக்கலாம்"

என்று லாங் டெர்ம் (?!) திட்டம் தீட்டும்

தோழர்கள் வாழ்க!

தோழர் குலத்தின் முதல் பிரதிநிதியின் (வாலண்டைன்) மரணதினத்தையும் காதலர்களுக்கே விட்டுக்கொடுத்த தோழர்களின் தியாகத்தை எப்போதுதான் அங்கீகரிக்கப்போகிறீர்கள்?

-ஒரு தோழன்!

7 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

OK, I accept this is not such a good post. aanaalum oru comment kooda illenna kashtama irukkuthee!

dvetrivel said...

சரியாய் சொன்னீற்கள் சுரேஷ். நான் பல இடங்களில் சென்று தூது விட்டு ஒரிரு இடங்களில் வகையாக மாட்டி இருக்கிறேன். அந்த வலி நமக்குத்தான் தெரியும். காதலிக்கற சல்லிபயலுவ நம்மல போட்டு விட்டு அவனுங்க நல்லா என்சாய் பண்ணிட்டு அதுக்கு ஒரு தினமே கொண்டாடீட்டு நம்மல டீல்ல உட்டுபுடராய்ங்களே!!!

ஜொள்ளுப்பாண்டி said...

என்னாங்க நீங்க ? யாரவது ஆயுள் தண்டனை கிடைக்க உதவுனவங்களை அங்கீகரிப்பாங்களா என்ன? நல்லா இருக்கே கதை!

Unknown said...

நல்ல கேள்வி தான்....

ஆனாலும், நீங்கள் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு மோசமில்லை.

சுமாராக இருக்கு ;)

Anonymous said...

பின்னூட்டமெல்லாம் கேட்டு வாங்குறது இல்லங்காணும். 'போட்டு' வாங்குறது? வலைப்பூ உலகத்துல என்ன குப்பை கொட்டிக் கிழிக்கிறீரோ தெரியலை!

சாத்தான்குளத்தான்

பினாத்தல் சுரேஷ் said...

ஆள்தோட்ட பூபதி, நன்றி.

ஜொள்ளுப்பாண்டி, கலக்கலான காரணம்.

துபாய்வாசி, நன்றி. சுமாராவாச்சும் இருக்குதே!

ஆசீப், கவிதை போட்டா மட்டுமே வருகை தருகிறீர்களே.. நீங்களா கவிப்பகைவன்?

தகடூர் கோபி(Gopi) said...

test :-P
(this should have been the first feedback)

 

blogger templates | Make Money Online