Oct 13, 2005

புது விளையாட்டு 12 Oct 05

ஒரு சின்ன திருத்தத்துடன் மீண்டும்:

ஃப்ளாஷ் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு.

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்தால் முதல் அமைச்சர் ஆகிவிடலாம்னு நெறய பேர் நெனைக்கிறாங்க. ஆனா அது எவ்வளவு கஷ்டம், எத்தனை தடைக்கற்களை எடைக்கற்களாக (ஓ ..படிக்கற்களாகவா.. சரி சரி.)மாத்தணும், எப்படி படிப்படியா காய் நகத்தணும்-ங்கறது பல பேருக்குத் தெரியறதில்லை.

எவ்வளவு கஷ்டமான விஷயத்தையும் விளையாட்ட சொல்லிக் கொடுத்தா கஷ்டம் கஷ்டமாகவே இருக்காது என்பது பினாத்தலின் அனுபவப் பாடம்.

இந்தப் பரம பதம் ஒரிஜினல் பரமபதம் போல இல்லை பாம்பு, ஏணி எல்லாம் கிடையாது. கொஞ்சம் மாடிஃபைடு! எப்படின்னா, சொக்கட்டானை உருட்டி, நீங்களே கால்குலேட் பண்ணி, சரியான கட்டத்துக்கு மேலே போயி க்ளிக் செய்யனும். அங்கே அந்தக் கட்டத்துக்கான நிகழ்வும் பலனும் இருக்கும். அதுக்குத் தகுந்தாப்போல, காய மேலேயும் கீழேயும் நகத்தணும்.

ஆடிப்பாத்துட்டு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க. இதே ஃபார்மட்லே வேறே சில விஷயங்களும் போடலாம்
.























5 பின்னூட்டங்கள்:

-L-L-D-a-s-u said...

Kalakkal Suresh

ramachandranusha(உஷா) said...

தாஸ¥ சொன்னதை வழி மொழிந்து, நட்சத்திர குத்தும் குத்திட்டேன்.

Ramya Nageswaran said...

Nicely done, Suresh

சின்னவன் said...

முன்னாள் கவர்ச்சி நடிகையை கொபெசெ வாய் அறிவிக்கும் அறிவிப்பு எங்கப்பா ?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தாஸு, உஷா, ரம்யா.

சின்னவன் - நூறு கட்டம் போட்டா எல்லாம் செய்யலாம் - 25 ஒட முடிச்சதால பல விஷயங்கல் உட்டுப் போச்சு!

 

blogger templates | Make Money Online